செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...!

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில்  வெந்நீர் அருந்தினால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிது வெந்நீர் அருந்தினால்  செரிமானம் சிறப்பாக இருக்கும்.
இரவு உணவை எப்போதும் குறைவாக உட்கொள்ளவேண்டும். ஆனால் பலர் கண்ட உணவுகளையும் இரவில் உட்கொள்கிறார்கள். இதனால் காலையில் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
 
மாதவிடாய் காலங்களில் வயிறுவலி அதிகமாக இருக்கும்போது, வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தினால் வலி சற்று மந்தப்படும். காலை வெறும் வயிற்றில் வெந்நீரோடு இஞ்சி அல்லது துளசியை கலந்து உண்டால், செரிமானம் மேம்படுவதோடு இளமையான தோற்றம் கிடைக்கும்.
தினமும் அதிகளவு வெந்நீர் குடிப்பதினால் இரத்த குழாய்கள் விரிவடையும், இதனால் இரத்த ஓட்டம் சீராக செயல்படுகிறது. மேலும் செல்களுக்கு ஊட்டச்சத்து, ஆக்ஸிஜன் ஆகியவை சரியாக கிடைக்கும். உடலும் ஆரோக்கியமாக செயல்படும்.
 
தினமும் வெந்நீர் குடிப்பதினால் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகள் சீராக இருக்கும். குறிப்பாக நம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதால் நமக்கு வயதான தொற்றங்களும் ஏற்படாது.
 
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் மிக விரைவில் உடல் எடையை குறைத்துவிட முடியும்.