புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே லிப் ஸ்க்ரப் தயாரிக்கலாம்! எப்படி...?

பொதுவாக வெளியில் செல்லும் பெண்கள் மற்றும் அலுவலகத்திற்குச் செல்லும் பெண்கள் தங்களின் தினப்படி ஒப்பனையை கண்களை உறுத்தாத வகையில் எப்படி செய்துகொள்வது, மேக்கப்பிற்கு பயன்படும் காஸ்மெட்டிக் தயாரிப்புகளை எப்படி தேர்வு செய்து வாங்குவது என்பது  குறித்து பார்ப்போம்.
நம்மிடம்  இருக்கும் இயல்பான அழகை, அதாவது நம்முடைய புருவம், கண்கள், உதடு, மூக்கு போன்ற பார்த்ததும் பட்டென கண்ணில்படும் புலன்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாய் அழகாக்கி வெளிக்காட்டுவதுதான் மேக்கப். 
 
லிப் லைனர் மற்றும் லிப்ஸ்டிக் இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு நமது உதடுகளை ஸாப்ட் அண்ட் ஸ்மூத்தாக வெடிப்பு எதுவும் இன்றி வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு லிப் ஃபார்ம் பயன்படுத்தலாம். லிப் ஃபார்ம் போட்டதும், அதை டிஸ்யூ பேப்பரால் ஒத்தி எடுத்துவிட்டு,  லைனர் போட்டு பிறகு லிப்ஸ்டிக் போட வேண்டும். இல்லை என்றால் லிப் ஸ்க்ரப் செய்துவிட்டு லிப்ஸ்டிக் போடலாம்.
லிப் ஸ்க்ரப்பை நம் வீட்டிலே செய்யலாம். சர்க்கரை, லெமன், தேன் மூன்றையும் கலந்து உதடுகளில் தடவி ஸ்க்ரப் செய்தால் உதட்டில் உள்ள டெட் ஸ்கின் நீங்கிவிடும். அத்துடன் உதடுகள் மிகவும் மென்மையாக மாறும். முதலில் லிப் லைனரால் ஒரு அவுட் லைன் கொடுத்து  அதன் பிறகே லிப்ஸ்டிக் போடவேண்டும். மேட் லிப்ஸ்டிக் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கும். இந்தவகை லிப்ஸ்டிக்கை ஈவினிங் பார்ட்டி மற்றும்  திருமண நிகழ்ச்சிகளுக்கு வெளியில் செல்லும்போது டார்க் ஷேடாகப் போடலாம். அலுவலகம் செல்வோர், லிப்ஸ்டிக் இன்றி வெளியில் போக விரும்பாதவர்கள் நியூட்ரலாக ஒரு லைட் ஷேடாகப் பயன்படுத்தலாம்.