1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமத்திற்கு தேன் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் !!

முகபொலிவை பெற தேன் மற்றும் பால் கலந்த கலவையை முகத்திற்கு தடவவேண்டும். இது முகத்தில் உள்ள மரணம்மடைந்த செல்களை போக்கி முகத்திற்கு புது பொலிவை தருகிறது.

* ஆரஞ்சு பிறும் தேன் ஆகியவை பனிகால சரும பாதுகாப்புக்கு ஏற்றவை. வீட்டில் கார்ன் ப்ளவர் இருக்கும். பால் அதனுடன் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் பளபளக்கும்.
 
1 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும். இப்படி செய்வதால், சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் மின்னும்.
 
* நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து 15 நிமிடம் ஊறவைத்து கழுவ  வேண்டும். இதனால் சரும வறட்சி நீக்கப்பட்டு, முதுமைக் கோடுகள் தெரிவது தடுக்கப்படும்.
 
* 1 டேபிள் ஸ்பூன் தேனில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். பின் முகத்தை நீரில் கழுவி, பின் அக்கலவையைக் கொண்டு சருமத்தை  வட்ட சுழற்சியில் ஸ்கரப் செய்து 10 நிமிடம் ஊறவைத்து கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் பிறும் வெள்ளைப்
புள்ளிகள் அகற்றப்படும்.
 
* 1 டேபிள் ஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்யவேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமத்தில் வறட்சியினால் ஏற்பட்ட சுருக்கங்கள் நீங்கி, சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்படும்.