செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

எண்ணெய் பசை சருமத்தை பராமரிக்க உதவும் அழகு குறிப்புகள்...!!

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.
 
வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து  தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும்.
 
தக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம்  அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.
 
பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும். 
 
எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம்.  இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக இருக்கும்.
 
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும். வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம்  பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.