1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் தரும் அற்புத பலன்கள்..!!

மாம்பழம்: முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். பழங்களின் அரசன். மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம். வைட்டமின் ‘ஏ’ குறைவால்  பார்வைக்கோளாறு, மலைக்கண் நோய் ஏற்படும். 

இப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருட்களும் உள்ளன. மாம்பழத்தில் மார்பகம், ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட இது உதவுகிறது.
 
ஆரஞ்சுப்பழம்: ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’,  வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய  தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ‘ஏ’ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும். மற்ற சிட்ரஸ் பழங்களைப்போல் இதிலும்  வைட்டமின் சி நிறைவாக உள்ளது. வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்கள் இணைந்து சருமத்தைப் பொலிவுறச் செய்கிறது.
 
கொய்யாப்பழம்: கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘சி’உள்ளது. வைட்டமின்கள் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன.  மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும், பற்களுக்கு நல்ல உறுதி தரும்.
 
கருப்பு திராட்சை: கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. இப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.
 
சப்போட்டா: சப்போட்டாவில் வைட்டமின் ஏ, பி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்கள் சிறிதளவு உள்ளன. இதில் சர்க்கரை மிக எளிய வடிவத்தில்  இருப்பதால், சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஆற்றலைத் தரும். இப்பழத்தை சாப்பிடுவதால் ரத்தசோகையைப் போக்கலாம்.