செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (18:46 IST)

இளம் வயதிலேயே நீரிழிவு நோய் வர என்ன காரணம்?

Diabetes
உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு நீரிழிவு நோய் உள்ளது என்றும் குறிப்பாக இளம் வயதிலேயே இந்தியர்களுக்கு நீரிழிவு நோய் தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு  கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருளை நாம் உணவாக எடுத்துக் கொள்வது தான் காரணம் என்று கூறப்படுகிறது. 
 
முன்பெல்லாம் 40 அல்லது 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே  நீரிழிவு நோய் இருக்கிறதா என்று டெஸ்ட் செய்வார்கள். ஆனால் இப்போது 25 அல்லது 30 வயது தாண்டியதுமே நீரிழிவு நோய்க்கான டெஸ்ட் எடுக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  
 
ஒரு காலத்தில் உண்ணும் உணவுக்கு ஏற்ப உடல் உழைப்பு மனிதர்களிடையே அதிகமாக இருந்தது.  அளவுக்கு அதிகமான கொழுப்புகள் சாப்பிட்டாலும் அந்த கொழுப்பை கரைக்கும் அளவுக்கு உடல் உழைப்பு இருந்தது. 
 
அதுமட்டுமின்றி பசித்த பிறகு உண்ணும் பழக்கமும் இருந்தது. ஆனால் தற்போது நினைத்த நேரமெல்லாம் சாப்பிடுவது, அதுவும் கொழுப்புகள் அதிக உள்ள உணவை சாப்பிடுவது, சாப்பாட்டுக்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது ஆகியவைதான் நீரிழிவு நோய்க்கு காரணம் என்று கூறப்படுகிறது.  
 
சரியான உணவு பழக்க வழக்கம் மற்றும் முறையான உடற்பயிற்சி ஆகியவை இருந்தால் இளம் வயதில் வரும் நீரிழிவு நோயை தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran