1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2023 (19:22 IST)

மன அழுத்தம் ஏற்பட்ட என்ன காரணம்?

Stress
உலகில் ஒவ்வொரு நாளும் மன அழுத்தத்தால் ஏற்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது என்பதை தற்போது பார்ப்போம். 
 
குடும்பம் தொழில் வாழ்வியல் ஆகியவற்றின் சிக்கல் ஏற்படும்போது மனரீதியாக அழுத்தம் ஏற்படுகிறது என்றும் எதையும் சரியாக கையாள கற்றுக் கொண்டால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
உளவியல் சிக்கல்கள் அதிகரித்து வருவது, தவறுகள் குற்றங்கள் ஆகியவையே மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மன அழுத்தம் ஏற்பட்டால் இயல்புநிலை மாறி குணமும் மாறுபடுகிறது என்றும் தோல்வி அடையும்போது எழும் கவலை காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது என்றும் அதேபோல் விரும்பியதை அடைய முடியாத போதும் கோபம் ஆத்திரம் ஆகியவை மன அழுத்தமாக உருவாகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
 
மன அழுத்தம் ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran