ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (19:16 IST)

கைக்குழந்தை அழுது கொண்டே இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

கைக்குழந்தை என்றாலே திடீர் திடீரென அழுது கொண்டே தான் இருக்கும் என்பதும் குழந்தை அழுவதற்கான காரணத்தை  அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குழந்தைக்கு பல்வேறு உடல் அசைவுகளும் ஏற்பட்டால் வலியால் அழ வாய்ப்புள்ளது. ஒவ்வொரு குழந்தையும்  பிறந்த மூன்று வாரங்களில் தொடங்கும்  குழந்தைகளுக்கு பெருங்குடல் வலி இருந்தால் அழுது கொண்டே இருக்கும் என்றும் மூன்று வாரங்களில் தொடங்கும் இந்த வலி  நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை இருக்கும் என்பதால் குழந்தைகள் அழுவதற்கு காரணமாக இருக்கும்.  

குழந்தைகளின் முதுகை வளைத்து வயிற்று தசைகளை இறுக்கி அழுதால் இதனை பெருங்குடல் வலி என அறிகுறியாக கொண்டு   உடனடியாக மருத்துவரை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.  

குழந்தையை மல்லாக்க படுக்க வைத்து கால்களை எடுத்து அவர்கள் அடிவயிற்றில் மென்மையாக வைத்தால் வலி குறையும். ஒரே நேரத்தில் இரண்டு கால்களையும் அல்லது ஒவ்வொரு காலையும் மாறி மாறி அடிவயிற்றில் மென்மையாக குழந்தையின் உடலில் உள்ள வாயு வெளியேறி வலி குறைய வாய்ப்பு உள்ளது.

Edited by Mahendran