வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (19:04 IST)

ஒருவர் மயக்கம் அடைந்தால் உடனே செய்யக்கூடிய முதலுதவி என்ன?

மயக்கம் அடைதல் என்பது பலருக்கும் வரும் ஒரு சாதாரண நோய் என்பதால் மயக்கம் வரும்போது உடனடியாக முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உட்கார்ந்த நிலையில் அல்லது நின்று கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுவதை நாம் பார்த்திருப்போம். அந்த மாதிரி நேரங்களில் உடனடியாக தலைக்கு தலையணை வைக்க கூடாது.
 
மயக்கம் வருவது போன்று இருந்தால் உடனடியாக தரையில் உட்கார வேண்டும் அல்லது தரையில் படுத்துக்கொள்ள வேண்டும். நல்ல காற்றோட்டமான இடத்திற்கு முதலில் மயக்கம் அடைந்த வரை கொண்டு செல்ல வேண்டும். ஆடைகளின் இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்தி தலை கீழையும் பாதங்கள் மேல் நோக்கி இருக்குமாறு படுக்க வைக்க வேண்டும் 
 
அதன் பிறகு முகத்தில் தண்ணீர் தெளித்தால் நரம்புகள் தூண்டப்பட்டு மயக்கம் தெளிந்து விடும். மயக்கம் தெளிந்த பிறகு குளுக்கோஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து குடிக்க தரலாம். ஒருவேளை மயக்கம் தெளியாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை காண வேண்டியது அவசியம்.
 
Edited by Mahendran