இரவில் பெண்களின் உடை அணியும் ஆண்கள்!
இரவு நேரங்கலில் வரும் பேய்களுக்கு பயந்து ஆண்கள் பெண்களின் உடை அணியும் வினோதமான நிகழ்வு தாய்லாந்தில் நடக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று காண்போம்...
தாய்லாந்தில் உள்ள கிராமத்தில் இந்த மாதத்தில் மட்டும் 3 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களின் ஆத்மா மற்ற ஆண்களின் உயிரை பறிக்கும் என்ற பயத்தில் கிராம மக்கள் உள்ளனர்.
எனவே, வீட்டில் உள்ள ஆண்கள் இரவு தூங்கும் போது பெண்கள் போல் உடை அணிந்துகொள்கின்றனர். மேலும், வீட்டு வாசலில் இங்கு ஆண்கள் இல்லை எனவும் பலகைகளை வைக்கின்றனர்.
இந்த பலகைகளை பார்த்து பேய் வீட்டில் ஆண்கள் இல்லை என திரும்பி சென்றுவிடும் என நம்பி வருகின்றனர். இது நகையூட்டும் விஷ்யமாக இருந்தாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில்இது போன்ற நிகழ்வுகள் வியப்பை ஏற்படுத்துகிறது.