திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (21:21 IST)

கோடை காலத்தை சமாளிக்க சில டிப்ஸ்

கோடை காலத்தில் எல்லாருக்குமே உடலில் வியர்வை வெளியேறிக்கொண்டே இருக்கும். அதன் விளைவாக துர்நாற்றம் ஏற்படும். எனவே நிறைய தண்ணீர்  குடிப்பது நல்லது.
 
 
* கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது பயன்  தரும்.
* வெயிலின் தாக்கம் முகத்தில் ஏராளமான கரும்புள்ளிகளை கொண்டு வரும். எண்ணெய் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தி எடுத்துவிடும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவலாம். எக்காரணத்தை கொண்டும் பருக்களை கிள்ளிவிடாதீர்கள்.  இதனால் பருக்கள் அதிகமாகும்.
 
கோடை வெயிலில் அலைந்துவிட்டு வந்தபின் கண்கள் உஷ்ணத்தால் எரியும். வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி இமைகளின் மீது வைத்து ஒற்றி  எடுங்கள், கண் எரிச்சல் பறந்துவிடும். இளநீரை முகத்தின் மீது ஸ்ப்ரே செய்யுங்கள் அல்லது தடவிக்கொண்டால் முகசருமம் வெப்பத்தால் பாதிக்கப்படுவதைத்  தவிர்க்கலாம்.
* தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமுறை பேஸ்பேக் போட்டுக் கொள்ளலாம். தர்பூசணி பழத்தைக் கொண்டு தோழிகள் எளிதாக வீட்டிலேயே பேஸ்பேக்  தயாரிக்கலாம்.
 
*அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது தான் நீங்கள் செய்யவேண்டிய முதல் சரும பராமரிப்பு. அடுத்து ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளியுங்கள். வெயிலால் மட்டுமின்றி வெயிலின் புழுக்கத்தால் கூட உடல் வியர்த்து சருமத்தில் அழுக்கு தேங்கிவிடும்.
 
* கோடை காலத்தில் சோப்பை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும் போது பவுடர் பூசுவது நல்லதல்ல. முகத்தை நன்றாக கழுவிய பிறகு அல்லது குளித்து துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.
 
* உடம்பில் இருந்து அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும்.