திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (16:16 IST)

கறிவேப்பிலையை தவறாமல் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

ஆயுர்வேத மருத்துவத்தில், கறிவேப்பிலையில் லேசான மலமிளக்கி குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது உடலில் உள்ள பித்த அளவை சமன் செய்யும் என்று சொல்லப் படுகிறது.


கறிவேப்பிலைக்கு கார்மினேடிவ் தன்மை உள்ளது. அதாவது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, மூல நோய், மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.

அஜீரணத்தைப் போக்க, சிறிது கறிவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

கறிவேப்பிலை எண்ணெய் மன அழுத்தத்தின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. மன அழுத்தம், மன நிலை கோளாறு மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

கறிவேப்பிலை மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள லினலூலை  உள்ளிழுப்பது கவலை, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

கறிவேப்பிலை முடி வளர தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும்  கொண்டுள்ளது. கறிவேப்பிலையை தவறாமல் உட்கொள்வது முடியை பலப்படுத்துகிறது. பொடுகை குணப்படுத்துகிறது மற்றும் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது.