1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
  4. Natural cure for tooth ache

பல் வலியை குணமாக்கும் வீட்டில் இருக்கும் இயற்கை மருந்துகள்!!

பல் வலி
பல் வலி வந்தால் டாக்டர்களிடன் செல்லாமல் எளிதாய் குணபடுத்தக்கூடிய வீட்டில் உள்ள இயற்கை மருந்துகளை காண்போம்...


 
 
# பல்வலி ஆரம்பத்தில் இருக்கும் போதே வெங்காயத்தை சாதாரணமாக மென்று திண்றால் வலி அதிகமாகாமல் இருக்கும்.
 
# வலி அதிகரித்து இருந்தால் வெங்காயத்தை மெல்லிசாக வெட்டி பற்களின் கீழ் பகுதியில் வைத்தால் வலி குறைந்துவிடும்.
 
# கிராம்பு எண்ணெய் பல் வலியை போக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. கிராம்பு எண்ணெயை பல்வலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 
# வெங்காயத்தை வாயில் வைக்க பிடிக்காதவர்கள்  வெள்ளரிக்காய்யை மெல்லிசாக நறுக்கி அதை பற்களுக்கு அடியில் வைக்கலாம்.
 
# பல்வலி மிக அதிகமாக இருந்தால், இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி வலி இருக்கும் இடத்தில் வைத்து இஞ்சியை மென்றால் நிவாரணம் கிடைக்கும்.
 
# வலி காரணமாக ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால், சூடான டீ பேக்கை எடுத்து பல்வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
புண் மற்றும் அல்சருக்கு தீர்வு தரும் நாட்டு மருந்துகள்!