திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 மார்ச் 2024 (16:13 IST)

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. கடுகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

Mustard
கடுகு சாப்பிடுவதால் உடலில் பல நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படும் நிலையில் அதுகுறித்து தற்போது பார்ப்போம்
 
கடுகு சாப்பிடிவதால் செரிமான சக்தி அதிகரிக்கும்.  இதில் இருக்கும் என்சைம்கள் உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவும். வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை போக்கும்.  கடுகு வயிற்றுப் புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.  இதில் இருக்கும் ஆன்டி-அல்சர் பண்புகள் வயிற்றுப் புண்களை ஆற்றும்.
 
 கடுகு புற்றுநோய் செல்களை வளர்ச்சியை தடுக்கும் தன்மை கொண்டது.   கடுகு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
 
 கடுகு சளி, இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளை தடுக்கும்.  இதில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தொற்றுநோய்களை தடுக்கும்.
 
Edited by Mahendran