1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (13:58 IST)

தக்காளியில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

தக்காளியில் வைட்டமின் ஏ, சி, ஈ மட்டுமல்லாமல், பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. 

 
சிறுநீர் எரிச்சல், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றை குணமாக்கவும் தக்காளி சாறு சிறந்ததாகும். இந்நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களை சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும். நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும்.
 
தக்காளி பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஏ முதலியவை அதிக அளவில் உள்ளன.  உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள் காலையில் பழுத்த இரு தக்காளிப் பழங்களை சாப்பிட்டால் போதும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படி சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். இதற்கு முக்கிய காரணம், அதில் மாவு சத்து குறைவாய் இருப்ப துதான். அத்துடன் உடலுக்கு தேவையான தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகிறது. 
 
தக்காளி உடலில் உள்ள நோய்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் தற்போது விரும்பி பருகப்படும் பானங்களுள் தக்காளி சாறும் ஒன்றாய் இருக்கிறது. தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
 
இரவு நேரத்தில் பார்வை சரியாக தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். தக்காளி செடியின் இலைகளை பறித்த உடன் 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும். செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகர் கலந்து மார்பு மீது வைத்துக் கட்டி வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
 
காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியவை தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தக்காளிச் சாற்றை அருந்த வேண்டும்.
 
பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லது. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு தக்காளி சூப் மிகவும் நல்லது. தக்காளியில் உள்ள இரும்பு சத்து எளிதில் ஜீரணமாகிறது.