1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2023 (09:45 IST)

அடிக்கடி நெட்டி எடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா..?

Fingers
கை, கால் விரல்களில் நெட்டி எடுக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இவ்வாறாக தொடர்ந்து நெட்டி எடுப்பது விரல்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.
  • விரல்களில் உள்ள இரண்டு எலும்புகளின் இணைப்புகள் உராயும்போது ஏற்படும் சத்தம்தான் நெட்டி என்கிறோம்.
  • நெட்டி எடுக்கும்போது எலும்புகளுக்கு இடையில் சினோவியல் என்ற மூட்டுறை திரவம் சுரக்கிறது.
  • இந்த திரவம் விரல் எலும்புகளின் இணைப்புகளில் படியும் முன்னர் இணைப்பில் வாயுவை வெளியேற்றுகிறது.
  • அடிக்கடி நெட்டி எடுப்பதால் விரல் இணைப்புகளை சுற்றியுள்ள சதைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
  • நெட்டி எடுப்பதால் நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
  • கை விரல்களில் அடிக்கடி நெட்டி எடுப்பதால் கையின் வலிமை பாதிக்கப்படுகிறது.
  • எப்போதாவது நெட்டி எடுப்பது இயல்புதான். ஆனால் தன்னிச்சையாக அடிக்கடி நெட்டி முறிப்பது பாதிப்பை ஏற்படுத்தலாம்.