1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
  4. How to protech hair from lice

பேன் தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

Lice Nuisance
தலையில் பேன் இருப்பது ஒரு பெரும் பிரச்சனையாக குறிப்பாக பெண்களுக்கு இருக்கும் நிலையில் இந்த தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
 
பேன் மிகவும் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை, ஒரு மாதத்திற்கு சுமார் 2000 முட்டைகள் வரை அது இடுவதால் மிக வேகமாக உடலில் மற்றும் தலையில் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு,
 
குறிப்பாக பெண்களில் தலையில் பேன் மிக எளிதில் பரவி வரும்.   பேன் தொல்லை அதிகம் இருந்தால் மொட்டை அடிக்க வேண்டும் அல்லது முடியை ஒட்ட வெட்டி விட வேண்டும்.
 
 
மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனி சீப்புகளை பயன்படுத்த வேண்டும். ஒரு முறை சீவிய உடன் அழுக்குகளை கழுவி நீக்கிவிட வேண்டும்.
 
மேலும் தனித்தனி தலையணைகளை பயன்படுத்த வேண்டும். தலையணை உறையை தினமும் வெந்நீரில் போட்டு சுத்தப்படுத்த வேண்டும்.
 
தேங்காய் எண்ணெயுடன் பூண்டு சாறு கலந்து தலையில் தேய்த்தால் பேன் தொல்லை நீங்கும் அல்லது தேங்காய் எண்ணெயை சூடு படுத்தி அதில் சிறிதளவு வேப்பிலை சாறு மற்றும் கற்றாழையை போட்டு காய்ச்சி வடித்து எண்ணெய் தலைக்கு தேய்த்தால் பேன் தொல்லை நீங்கும்  
 
Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
வறட்சியான சருமத்தை ஈரப்பதமாக்க கடலைமாவு ஃபேஸ்பேக்..!