வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : புதன், 9 மே 2018 (16:04 IST)

பச்சை பூண்டா? சமைத்த பூண்டா? வெறும் வயிற்றில் பூண்டு எடுத்துக்கொள்வது நல்லதா?

நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

 
அதில் ஒன்று பூண்டு. பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. உடலில் ஏற்படுகிற பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை அகற்ற பூண்டு உதவுகிறது. மருத்துவ குணங்கள் நிரம்பிய பூண்டினை எப்படி பயன்படுத்தினால் அதனால் பயனடையலாம் என்று கீழே பார்ப்போம்.
 
சிலர் பூண்டினை வேக வைத்து அல்லது வெறும் சட்டியில் வறுத்து பயன்படுத்துவார்கள். பூண்டினை சமைத்து பயன்படுத்துவதை விட பச்சையாக படுத்துவதே நல்லது.
 
பூண்டினை சமைக்கும் போது அதில் இருக்கும் அலிசின் என்ற சத்து பொருள் அழிந்துவிடும். பச்சையாக சாப்பிடும்போது அலிசின் சத்து உட்லிற்கு கிடைக்கும். தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வருவதால் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிற பாக்டீரியாக்கள் நீங்கிவிடும்.
 
காலையில் வெறும் வயிற்றில் பூண்டினை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். காலை உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி, செரிமானக் கோளாறு, வயிற்றுப் போக்கும் வாந்தி ஆகியவை ஏற்படும்.
 
எனவே வெறும் வயிற்றில் பூண்டு எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம்.