கண் கட்டியை போக்கும் எளிய வழிமுறைகள்!
வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் கண் கட்டியை போக்க சில எளிய முறைகள்.
வெயிலின் கடுமையான தாக்கத்தால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். இதனால் கண் கட்டி உண்டாக வாய்ப்புள்ளது. கண்ணின் இமை மற்றிம் கீழ் பகுதியில் வரும் கட்டி கண்ணில் வலி மற்றும் உறுத்தலை உண்டாக்கும்.
இதனை எளிதில் குணப்படுத்த சில சிறந்த வழிமுறைகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
அகத்திக் கீரை சாற்றுடன் துவரம் பருப்பு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் கண் எரிச்சல் வராது.
அகத்திக் கீரையை அரைத்து அதை தலையின் உச்சியில் ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் உடல் சூடு குறையும்.
முருங்கைக் கீரையை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், உடல் குளிர்ச்சி அடைவதுடன் கண்கட்டி வராமலும் தடுக்கலாம்.
உருளை கிழங்கு தோளை சீவி அதனை கண்களில் சில மணி நேரம் வைத்தால் கட்டி கரையும்.
வெந்நீர் உப்பு கலந்து அந்த நீரை கொண்டு கண்களில் ஒத்தனம் கொடுக்கலாம்.
காலையில் எழுந்தவுடன் கண்களில் நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.