செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (16:44 IST)

முட்டை ஓட்டை கொண்டு டல்லான முகத்தை பளிச்சிட செய்யும் அழகு குறிப்புகள் !!

முட்டை ஓட்டை தூக்கி எறியாமல் அந்த ஓடுகளை பத்திரப்படுத்துங்கள். அதில் மெல்லிய ஜெல் போன்ற பொருள் ஒட்டி கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த பொருள்தான் உங்கள் அழகை பலமடங்காக்க பயன்படுகிறது.
 
முதலில் எடுத்து வைத்த முட்டை ஓடுகளை நன்கு மிக்சியில் பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமித்து, இந்த முட்டை ஓட்டு பொடியை பயன்படுத்தி எளிதினில் முக அழகை பராமரிக்கலாம்.
 
முட்டை ஓட்டு பொடியை முட்டையின் வெள்ளை கருவோடு ஒன்றாக அடித்து கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை நீங்கள் முகத்தில் தடவ வேண்டும். உலர்ந்த பின்னர் கழுவி விடுங்கள். உடனடியாகவே உங்கள் முகம் பிரகாசம் ஆகியிருப்பதை நீங்கள் உணர முடியும். வாரம் இருமுறை நீங்கள் செய்தால் நன்மை தரும்.
 
சருமத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்வதில் முட்டையின் ஓடு முக்கிய பங்கு வகிக்கிறது. முட்டை ஓட்டு பொடியுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து பசைபோல செய்து அதனை முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவி விடுங்கள். இப்படி செய்வதால் வெயிலால் கறுத்து களையிழந்து முகம் ஜொலிக்கும்.
 
2 டீஸ்பூன் முட்டை ஓட்டு பொடியுடன் தேன், கடலை மாவு போட்டு கலந்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவி விடுங்கள். வாரத்திற்கு 2 முறை இதனை செய்யலாம்.
 
4 ஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தேன் கலந்து கண்களைச் சுற்றி இருக்கும் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரவு தூங்கும் முன் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் கண்களின் கீழ் பகுதி வறட்சி அடையாமல் நீண்ட நேரம் புத்துணர்வோடு இருக்கும்.