செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (18:44 IST)

கைக்குழந்தையுடன் வெளியே செல்லும்போது கவனிக்க வேண்டிய முக்கியமானவை..!

கைக்குழந்தையுடன் தனியாகவோ அல்லது தம்பதியாகவோ செல்லும்போது சில விஷயங்களை முக்கியமாக கவனித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைக்கு தேவையானவற்றை தனியாக ஒரு பையில் வைத்துக் கொள்ள வேண்டும். 
 
அந்த பையில் பால்,  துடைத்துக் கொள்ள துண்டு, வெந்நீர் அல்லது சுத்தமான தண்ணீர், கை குட்டைகள், தொப்பி, டயப்பர் ஆகியவற்றை மறக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும். 
 
கைக்குழந்தை அடிக்கடி சிறுநீர் அல்லது மலம் கழிக்க கூடும் என்பதால் சுத்தம் செய்ய தேவையான பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் ரெடிமேட் துணி அல்லது டயப்பர்களையும் மருந்து பெட்டியையும் வைத்துக் கொள்ள வேண்டும். 
 
அதில் குறிப்பாக காய்ச்சல் இருமல் சளி வாந்தி பைதியை குறைக்கும் மருந்துகளை வைத்திருக்க வேண்டும்.  அதேபோல் ஆப்பிள் ஆரஞ்சு மாதுளை போன்ற சத்துள்ள ஜூஸ்களையும் எடுத்து சொல்லலாம். 
 
குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டும் பொருள்களையும் கையில் வைத்துக் கொள்வது நல்லது.  குழந்தையுடன் இனிமையான பயணம் செய்ய வேண்டும் என்றால் மேற்கண்டவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
Edited by Mahendran