செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By

புதிதாக ஜிம்முக்குச் செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்...!

புதிதாக ஜிம்முக்குச் செல்பவர்கள்  சில அடிப்படை விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். ஜிம்முக்கு செல்லும்போது, பிட்னெஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும். உடலின் நெகிழ்வுத்தன்மை, உடல் வலிமை, கார்டியோ உடற்பயிற்சிகளைச் செய்யும் திறன், உடலின் சமநிலைத்தன்மை, பி.எம்.ஐ மதிப்பு போன்றவற்றை பரிசோதித்து, அதன் பிறகே உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும்.
ஜிம்முக்குள் நுழைந்தவுடனே ஆர்வக்கோளாறில் கடுமையான பயிற்சிகளைச்  செய்யக்கூடாது. ஜிம்முக்குச் செல்லும்போது டி ஷர்ட், டிராக் பேன்ட், ஸ்போர்ட்ஸ்  ஷூ அணிந்து செல்வது அவசியம். உடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வானதாக் இருப்பது அவசியம்.
 
ஒரே நாளில் பல மணி நேரம் பயிற்சி செய்வதால் கட்டுடல் வந்துவிடாது. மாறாக, உடல்வலி, வீக்கம், தசைப்பிடிப்புதான்  ஏற்படும். பயிற்சியாளரின்  அறிவுரைப்படி குறிப்பிட்ட நேரம் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
 
காலை எழுந்ததும் ஜிம்முக்குப் போகும் முன்னர், இரவு ஊறவைத்த கொண்டைக்கடலை,  முளைகட்டிய பயறு ஆகியவற்றைச் சாப்பிடலாம். எனர்ஜி தரும்  பாதாம், வால்நட் ஆகிய நட்ஸ்களும் நல்லது.
 
உடற்பயிற்சி தொடங்குவற்கு முன்பு ஐந்து நிமிடங்கள் வார்ம்அப் பயிற்சிகள் அவசியம். பிறகு, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான்,  உடற்பயிற்சி செய்வதற்கு உடலில் உள்ள தசைகள் ஒத்துழைக்கும். தசைப்பிடிப்பு உள்லிட்ட தசையில் ஏற்படும் கோளாறுகளும் தவிர்க்கப்படும்.
 
உடற்பயிற்சியின்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சிலர் சொல்வது முற்றிலும் தவறானது. நாக்கு உலரும்போது 50 மி.லி. தண்ணீரை பருக வேண்டும்.  உடற்பயிற்சி முடிந்தவுடன் 15 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீரைக் குடிக்கலாம்.
 
காலை எழுந்ததும் ஜிம்முக்குப் போகும் முன்னர், இரவு ஊறவைத்த கொண்டைக்கடலை,  முளைகட்டிய பயறு ஆகியவற்றைச் சாப்பிடலாம். எனர்ஜி தரும்  பாதாம், வால்நட் ஆகிய நட்ஸ்களும் நல்லது. மாலையில் ஜிம்முக்கு செல்பவர்கள், உடற்பயிற்சி செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர்  டீ, காபி,  டிஃபன், நொறுக்குத்தீனிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும்.
 
வாரத்துக்கு ஒரு நாள் உடற்பயிற்க்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். தசைகளுக்கு ஓய்வு கொடுத்தால் மட்டுமே, அடுத்த வாரம் முறையாக உடற்பயிற்சி செய்ய  இயலும். எனவே, ஆர்வக்கோளாறில் ஜிம்மில் சேர்ந்ததும் ஏழு நாட்களும் பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.