ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (10:51 IST)

தினமும் சிக்கன் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Chicken Gravy
சிக்கன் மக்களின் அன்றாட விருப்பமான அசைவ உணவுகளில் ஒன்றாக உள்ளது. பலரும் பல்வேறு வகைகளில் தினம்தோறும் சிக்கனை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
  • சிக்கனை தினமும் சாப்பிடும்போது ஏற்படும் அதிக புரதம் ஆஸ்டியோபோராசிஸை தடுக்கும் பணியை நிறுத்துவதால் எலும்பு பிரச்சினைகள் உண்டாகும்.
  • சிக்கனில் உள்ள அதிக கலோரி மற்றும் கொழுப்பு உடலில் தொடர்ந்து சேர்வதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
  • வறுத்த சிக்கன் கறியில் உள்ள கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதால் இதய பிரச்சினைகள் ஏற்படலாம்.
  • கோழிக்கறியில் உள்ள அதிகமான வெப்பம் உடலை சூடாக்குவதுடன் பித்தம், நீர்க்கடுப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும்.
  • கோழிக்கறியில் உள்ள சில மூலப்பொருட்கள் பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் தினசரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • மருந்துகள் மூலம் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகளை தொடர்ந்து உண்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என கூறப்படுகிறது.
  • தினமும் கோழிக்கறி சாப்பிடுபவர்கள் அதை தவிர்த்து வாரம் ஒருமுறை அல்லது அதிகபட்சம் இருமுறை மட்டும் சாப்பிடலாம்.