ரூ.250 கோடி வசூலை நெருங்கிய சீன்!.. 300 கோடி அடிக்குமா?...
மலையாள நடிகர் பகத் பாசிலை வைத்து ஆவேசம் என்கிற திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் ஜித்து மாதவன். அந்தப் படம் சூர்யாவுக்கு பிடித்துப் போக அவரின் இயக்கத்தில் சீன் என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஆனந்தராஜ், நஸ்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்..
காவல்துறை அதிகாரியாக இருக்கும் சூர்யா ஒரு கட்டத்தில் அந்த வேலையை விட்டு விடுகிறார்.. ஆனால் ஒரு சைக்கோ கொலைகாரனை பிடிப்பதற்காக மீண்டும் அவர் போலீஸ் வேலையை செய்யும் சூழ்நிலை வருகிறது.. சூர்யா என்ன செய்தார்? ஒரு மொக்கையான டீம் வைத்துக் கொண்டு அந்த சைக்கோ கொலைக்காரனை அவர் எப்படி பிடித்தார்? என்பதை மிகவும் டார்க் காமெடி கலந்து சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் ஜித்து மாதவன் சொல்லியிருந்தார்.
எனவே, இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது. படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. தீபாவளியை முன்னிட்டு கடந்த 6ம் தேதி வெளியான சீன் திரைப்படம் படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை ரூ.242.05 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் இந்தியாவில் ரூ.158.55 கோடியும், வெளிநாடுகளில் ரூ.83.50 கோடியும் இப்படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.