மைக்கேல் ஜாக்சனின் பாட்டில் ஒபாமாவை கலாய்த்த நெட்டிசன்கள் : வீடியோ
மைக்கேல் ஜாக்சனின் திரில்லர் ஆல்பத்தில் இடம் பெறும் ஒரு பாடலில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மேடை பேச்சுகளை பதிவு செய்து, யூடியூபில் ஒரு விடீயோவாக வெளியிட்டு குறும்பு செய்துள்ளனர்.
ஓபாமா பல்வேறு மேடைகளில் பேசும் போது கூறிய ஒரு சில குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் எடுத்து, இசைக்கு ஏற்றவாறு சேர்த்துள்ளனர். பலரின் மனதை கவர்ந்த மைக்கேல் ஜாக்சனின் திரில்லர் பாடலில் ஒபாமாவின் வார்த்தைகளை அழகாக பொருத்தி குறும்பு செய்துள்ளனர்.