திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2016 (12:47 IST)

டேட்டா இல்லாமலேயே வீடியோ டவுன்லோட்/ஷேரிங்: யூட்யூப் கோ ஆப்

யூட்யூப் பயனர்கள் இந்தியாவில் எந்த விதமான தரவு பயன்பாடும் இல்லாமல் தங்களுக்கு பிடித்த வீடியோக்களை பார்க்கலாம் என அறிவித்துள்ளது. 

 
கூகுள் அல்லோ அறிமுகத்திற்கு பின்னர் கூகுள் தொழில்நுட்ப நிறுவனம் இந்திய யூட்யூப் பயனர்களுக்கு கொண்டு வரும் புதிய திட்டம் தான் யூட்யூப் கோ. 
 
இந்த ஆப் இணைப்பு வசதி குறைவாக இருக்கும் போது கூட யூட்யூப் தனை சுமூகமாக அணுக வழிவகுக்கும், உடன் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் வேலை செய்யும்.
 
குறிப்பாக பயனர் ஆப்லைனில் விடியோக்கள் பார்க்க முடியும். மேலும் இந்த ஆப் ஆனது குறிப்பிட்ட பதிவிறக்கம் நிகழ்த்த எந்த அளவிலான டேட்டா பயன்பாடு தேவைப்படும் என்பதை முன்கூட்டியே அறிவிக்கும். 
 
மிகவும் குறைவான தரவில் வீடியோவை ஆஃப்லைனில் பார்க்க மட்டுமில்லாது லோக்கல் ஷேர் ஆப்ஷன் மூலம் பயனர்களை அருகில் இருப்பவர்களுக்கு விடியோவை பகிரவும் அனுமதிக்கிறது. இதில், எந்த தரவும் இல்லாமல் வீடியோவை பகிர முடியும்.
 
இந்த ஆப் அதிகாரப்பூர்வமாக நாட்டில் தொடங்கப்படும் வரை யூட்யூப்-ல் சைன்-இன் செய்து இந்த புதிய யூட்யூப் கோ ஆப் டெஸ்ட் வெர்ஷனை பயன்படுத்திக்கொள்ளலாம்.