வாட்ஸ் ஆப் இனி இயங்காது: ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு பேரிடி!
குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ் ஆப் இயங்காது என வாட்ஸ் நிறுவனமே அறிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப்பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னரான அறிவிப்பில் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் 7 ஐஓஎஸ் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் புதிதாக வாட்ஸ் ஆப் கணக்கு எதுவும் தொடங்க முடியாது. ஏற்கனவே, வாட்ஸ் ஆப் இருக்கும் பட்சத்தில், அதுவும் வேலை செய்யாதாம்.
வாட்ஸ் ஆப்பை புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 4.03 வெர்ஷன் அல்லது அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட்போனில் வருங்காலத்தில் வாட்ஸ் ஆப் வேலை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.