1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 மார்ச் 2018 (13:26 IST)

இதுபுதுசு... ஜியோ போனில் வாட்ஸ் அப்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், ஜியோ போனை அறிமுகம் செய்து அதிர்ச்சியை கொடுத்தது. 
 
ஜியோ அறிமுகம் செய்த ஸ்மார்ட் ஜியோபோன் ஃபீச்சர்போன் லினக்ஸ் சார்ந்த இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. கை ஓஎஸ் என அழைக்கப்படும் ஜியோபோன் இயங்குதளத்தில் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
 
லினக்ஸ் சார்ந்து இயங்கும் கை ஓஎஸ் மிகவும் குறைந்த மெமரி கொண்ட சாதனங்களில் சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது கை ஓஎஸ்இ-ல் வாட்ஸ் அப் செயலி சார்ந்த விவரங்கள் வழங்கப்பட உள்ளது. 

 
டச் ஸ்கீன் இல்லாத போன்களில் செயல்பட கூடிய அம்சத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலி சிம்பயன் 40 என ஃபீச்சர் போன் இயங்குதளத்தில் வேலை செய்கிறது. எனவே, விரைவில் ஜியோ போனில் வாட்ஸ் அப் செயல்பச கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
ரூ.1,500-க்கு கிடைக்கும் ஜியோ போனை பயன்படுத்தி மூன்று ஆண்டுகளில் திரும்ப வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,500 திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.