திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 ஜூலை 2018 (14:12 IST)

78 ஜிபி ரூ.199-க்கு: ஜியோவை மிஞ்சும் வோடபோன் ஆஃபர்!

வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் இணைப்பு குறித்து விரைவான நடவடிக்கைகல் எடுக்கப்பட்டுவரும் நிலையில், வோடபோன் தனது மாற்றி அமைக்கப்பட்ட சலுகை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
ஆம், தனது பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199 சலுகையை மாற்றியமைத்துள்ளது. பழைய சலுகையில் பயனர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. 
 
தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த ரூ.199 சலுகையில் தினமும் அதிகபட்சம் 2.8 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
 
28 நாட்கள் வேலிடிட்டி விகிதத்தில் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 78.4 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையும் வழங்கப்படுகிறது. 
 
இதற்கு முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஜியோ ரூ.198 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.