வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு மாற்றுவதில் ரூ.12 கோடி ஊழல் : அதிர்ச்சி வீடியோ

Last Updated: வியாழன், 19 ஜூலை 2018 (13:30 IST)
தமிழகத்தில் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக உள்ளூர் நோயாளிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றனர்.  மாறாக 12 கோடி ரூபாய் வரை வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்கப்படுவதாகவ அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
 
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:
 
சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை தூக்கிலிடவேண்டும். எஸ்.பி.கே. நிறுவனத்தில் நடந்துவரும் வருமானவரிதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
 
தமிழகத்தில் இருதயம், நுரையீரல் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது. திட்டமிட்டே உள்ளூர் நோயாளிகள் புறக்கணித்துவிட்டு, வெளிநாட்டு நோயாளிகளுக்கு 12 கோடிரூபாய் வரை லஞ்சம் பெற்று உறுப்பு மாற்றப்படுகிறது. இதில் ஐஏஎஸ் அதிகாரிகள், அமைசர்களுக்கு தொடர்பு உள்ளது. சென்னையில் உள்ள 2 மருத்துவமனைகள் தான் இந்த மோசடி நடைபெறுகிறது. மருத்துவர் என்ற பெயரில் தான் தனிப்பட்டமுறையில் நீதிமன்றத்தை நாடுவேன் 
 
எஸ்.பி.கே. நிறுவனத்திற்கும் முதலமைச்சரின் உறவினருக்கும், திமுக முன்னாள் அமைச்சருக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தால் உண்மை வெளிவராது. எனவே சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அதேபோல் முட்டை ஊழல் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

-சி.ஆனந்தகுமார்


 


இதில் மேலும் படிக்கவும் :