வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (16:26 IST)

அடடே... பலே ஆஃபர்களுடன் வோடபோன் புதிய ரீசார்ஜ்!!

வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.46-ல் புதிய ரீசார்ஜ் திட்டத்தை வழங்கியுள்ளது. 
 
வோடபோன் ரூ. 46 சலுகையில் லோக்கல் ஆன்-நெட் நைட் நிமிடங்கள் வழங்கப்படுகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. முதற்கட்டமாக வோடபோன் ரூ. 46 விலை சலுகை கேரளா வட்டாரத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 
 
புதிய சலுகையில் 100 லோக்கல் ஆன்-நெட் நைட் நிமிடங்கள் வழங்குகிறது. இத்துடன் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் நொடிக்கு 2.5 பைசா கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. நைட் காலிங் அழைப்புகள் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.