திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (15:52 IST)

வோடபோன் டவுன் டவுன்!! நெட்வொர்க்கே இல்லாததால் பயனர்கள் அதிருப்தி

வோடபோன் நிறுவன நெட்வொர்க் பணி செய்யாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். 
 
வோடபோன் நிறுவனத்தின் நெட்வொர்க் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யாமல் இருப்பதால் வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Vodafonedown என்ர ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 
 
ஆம், கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் சில பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வோடபோன் நெட்வொர்க் பணி செய்யவில்லை என தெரிகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் Vodafone down என பதிவிட்டு வருகின்றனர்.
 
மேலும் சிலர் நாங்கள் எங்கள் என்னை மற்ற நெட்வொர்க்கிற்கு போர்ட் செய்ய போகிறோம் எனவும் பதிவிட்டுள்ளனர். சமீபத்தில் டிராய் வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது என அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.