1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2017 (13:59 IST)

குறைந்த விலையில் அதிக ஜிபி: அதிரடி திருத்தங்களுடன் ஏர்டெல் புதிய யுக்தி!!

ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர்ம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கட்டண திட்டத்தையோ அல்லது பழைய திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருகின்றன பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள். 
 
அந்த வகையில் ஏர்டெல் காம்போ திட்டங்களை (டேட்டா + வாய்ஸ்) வழங்கி வருகிறது. இதில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. ஆம், ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.157-க்கு வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா கட்டணத்தில் மாற்றம் செய்துள்ளது.
 
ரூ.157 என்ற விலையில் 27 நாட்கள் வேலிடிட்யுடன் 3 ஜிபி டேட்டாவை அளிக்கிறது. இந்த திட்டம் குறிப்பிட்ட பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. அதிலும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி போன்ற வட்டாரங்கள் மை ஏர்டெல் செயலி மூலம் புதிய சலுகையை பெற முடிவதாக கூறப்படுகிறது. 
 
இது மட்டுமின்றி ரூ.49-க்கு புதிய திட்டத்தையும் வழங்குகிறது. ரூ.49-க்கு 1 ஜிபி அளவிலான 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் ஒரு நாள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.