திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (17:30 IST)

எதிர்ப்பார்த்ததை விட குறைந்த விலைக்கு கிடைக்குமா விவோ v19 pro??

Vivo V19 Pro

விவோ v19 pro ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் மார்ச் மாத இறுதியில் வெளியாகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ஆம், சீன நிறுவனமான விவோ இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கிய இடத்தை பிடித்து வைத்துள்ளது. இந்நிலையில் விவோவின் v19 pro ஸ்மார்ட்போன் வருகிற மார்ச்  3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன் வெளியான விவோ v17 pro-வின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ.34,990-யில் இருந்து துவங்க கூடும் என தெரிகிறது. அல்லது இதைவிட குறைவான விலையிலும் சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்பட்டலாம் என தெரிகிறது.