1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2017 (12:52 IST)

திருடிய தகவல்களை திரும்ப கொடுத்துவிடு; ஹேக்கரிடம் கெஞ்சிய உபர் நிறுவனம்

சில மாதங்களுக்கு முன் வாடிக்கையாளர்களில் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்ட உபர் நிறுவனம், திருடப்பட்ட தகவல்களை பாதுகாக்க பேரம் பேசியுள்ளது.

 
கடந்த மாதம் உபர் நிறுவனத்தின் 5.7கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஓட்டுநர்கள் மற்றும் பயணம் செய்பவர்கள் என இருதரப்பினரின் தகவல்களும் திருடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உபர் நிறுவனத்தின் தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டது. அது ஹேக்கர்களின் செயலாக இருக்கலாம் என செய்திகள் வெளிவந்தது.
 
உபர் நிறுவனத்தின் சர்வர் மர்ம நபர் ஒருவரால் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. நிறுவனத்தின் பல முக்கியமான தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் உபர் நிறுவனம் திருடப்பட்ட தகவல்களை பாதுகாக்க பணம் கொடுக்க முன்வந்தது.
 
அதன்படி ஹேக்கரிடம் பேரம் பேசி ரூ.65 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளது. ஹேக்கிங் செய்யப்பட்ட செய்தி வெளியே தெரிந்தவுடன் பலரும் உபர் நிறுவனத்தில் பயணிப்பதை நிறுத்தி விட்டனர். இதனால் நிறுவனத்தின் வருமானம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.