செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (13:48 IST)

Airtel, Vodafone சேவைகளை நிறுத்த TRAI அதிரடி உத்தரவு: பின்னணி என்ன?

பிரத்யேக சலுகைகள் வழங்குவதை நிறுத்த ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.
 
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஏர்டெல் மற்றும் வோடபோன ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
 
அதில், இந்தியாவில் அதிக தொகை கொடுக்கும் சிலருக்கு மட்டும் அதிவேக இணைய வசதி வழங்கும் பிரத்யேக சலுகைகள் வழங்குவதை நிறுத்துமாறு கூறியுள்ளது. 
 
அதோடு, அதிக விலை கொடுத்தால் அதிக டேட்டா வழங்கும் நீங்கள் மற்ற சலுகைகளை தேர்வு செய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு எந்த விதத்தில் பாதுகாப்பு வழங்குவீர்கள் என கேள்வியும் எழுப்பியுள்ளது.