1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 18 செப்டம்பர் 2017 (19:41 IST)

அபராத கட்டணங்கள் குறித்த அதிரடி அறிவிப்புகளுடன் எஸ்பிஐ: விவரங்கள் உள்ளே...

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை குறித்த அறிவிப்பையும், அதற்கான அபராதங்கள் குறித்தும் கடந்த ஏப்ரலில் எஸ்பிஐ சில அறிவிப்புகளை வெளியிட்டது. 


 
 
வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.5,000 ஆக இருக்க வேண்டும் எனவும் இந்த தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தது.
 
75% குறைவாக வைத்திருப்பவர்கள் கணக்கில் இருந்து ரூ.100 மற்றும் ஜிஎஸ்டி, 50% குறைவாக இருப்பு வைத்திருப்பவர்கள் கணக்கில் இருந்து ரூ.50 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இதேபோல, கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.1,000த்தையும், அபராத தொகையாக ரூ.20 முதல் ரூ.50 வரை கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 
இது குறித்த எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பலர் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், இந்த அபராத கட்டண முடிவுகள் குறித்து பரிசீலிக்க உள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.