வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (01:05 IST)

2 இன்ச் உயரம் குறைந்த பாவாடையால் ரூ.50 ஆயிரம் அபராதம்

டெல்லியில் மணப்பெண் ஒருவர் தன்னுடைய திருமண தினத்தன்று அணியும் பாவாடையின் உயரம் 2 இன்ச் குறைவாக இருந்ததாக தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றார். இதனால் அந்த பாவாடையை தைத்து கொடுத்த டிசைனருக்கு ரூ.50 ஆயிரம் நீதிமன்றம் அபராதம் விதித்தது.



 
 
டெல்லியை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2008ஆம் ஆண்டு தனது திருமணத்திற்காக லெஹாங்கே (lehanga) என்று கூறப்படும் திருமண உடையை தைக்க கொடுத்திருந்தார். இது நம்மூர் பாவாடையை போல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பாவாடையின் உயரம் அவர் கொடுத்த அளவைவிட 2 இன்ச் குறைவாக இருந்ததாம். உயரத்தை சரிசெய்து கொடுக்க அந்த பெண் கேட்டபோது அதிகப்படியான வேலைப்பளு இருந்ததால் டிசைனர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து அந்த பெண் தொடுத்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்றது. இறுதியில் தற்போது டிசைனர் ரூ.50,000 அபராதமும், அந்த பாவாடையின் மதிப்பான ரூ.14 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.64 ஆயிரம் அந்த பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டது.