1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 16 செப்டம்பர் 2017 (14:53 IST)

ஐபோனில் ஃபாஸ்ட் சார்ஜிங் பெற கூடுதல் கட்டணம்; ஆப்பிள் அதிரடி

ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன் மாடல்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெற கூடுதலாக தொகை செலுத்த வேண்டும்.


 

 
ஆப்பிள் நிறுவனம் கடந்த 12ஆம் தேதி புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்தது. ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் x என்று மூன்று புதிய மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த புதிய வகை ஐபோன்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
 
ஆனால் இந்த வசதியை பெற வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.6500 வரை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் செய்ய பிரத்தியேக சார்ஜர் மற்றும் கேபிள் வாங்க வேண்டும். இந்த நிலை பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் துவங்கி விலை உயர்ந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் வரை எல்லாவற்றிற்கும் பொருந்துகிறது.
 
ஆண்ட்ராய்டு மொபைகளில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் சார்ஜர்களும் வழங்கப்படுகிறது. ஆனால் ஐபோன் மொபைல்களுக்கு மட்டும் தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும்.