புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (13:33 IST)

வாயை பிளக்க வைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போனின் அசாத்திய விலை குறைப்பு!!

சாம்சங் நிறுவனம் தனது படைப்புகள் மீது அதிகப்படியான விலை குறைப்பை நிகழ்த்தியுள்ளது. 
 
ஆம், சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ20எஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீதான விலையை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு விவரங்கள் பின்வருமாறு... 
 
1 சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ், 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
2 சாம்சங் கேலக்ஸி எஸ்10, 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,100 குறைக்கப்பட்டு ரூ.54,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
3. சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ், 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,100 குறைக்கப்பட்டு ரூ. 61,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
4. சாம்சங் கேலக்ஸி எஸ்10இ, 128 ஜிபி மாடல் விலை ரூ.8000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 47,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.