திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2017 (18:07 IST)

கடல் வழி இணையம்: ரிலையன்ஸ் ஜியோ பிரம்மாண்டம்!!

உலகின் மிகப்பெரிய கடல்வழி இணையச் சேவையை ஜியோ அறிமுகம் செய்ய உள்ளது. இது 3 கண்டங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.


 
 
ஜியோவின் அறிமுகம் தொலைத் தொடர்பு சேவையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இணைய சேவைக்காக கடல்வழி கேபிள்களை நிறுவ உள்ளது.
 
இந்த திட்டத்தின் மூலம் 40 டெரா பிட்ஸ் அலைவரிசையை பகிர முடியும் என கூறப்படுகிறது. இந்த சேவை ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா ஆகிய 3 கண்டங்களை இணைக்கிறது. 
 
இந்த கேபிள்கள் பிரான்சின் மர்செய்லீயில் இருந்து, ஹாங்காங் வரை நீள்கிறது. இதற்காக ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவில் உள்ள நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
 
இந்த கேபிள் மூலம் 100 ஜிபிபிஎஸ் அதிவேக இணையச் சேவையை தொடர்ந்து பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.