ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: சிறந்த 3ஜி டேட்டா பேக் எது?

Last Updated: வெள்ளி, 8 மார்ச் 2019 (15:03 IST)
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனக்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கிவருகின்றன. 
 
இந்நிலையில் இந்நிறுவனங்கள் வழங்கும் சிறந்த 3ஜிபி ப்ரீபெய்ட் டேட்டா பேக்களின் பட்டியலை இங்கு பார்ப்போம்...
 
ரிலையன்ஸ் ஜியோ ரூ.299:
இந்த பேக்கில் தினமும் 3 ஜிபி டேட்டா சேவை, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், ஜியோ டிவி மற்றும் இதர ஜியோ சேவைகளும் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ.349:
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 3 ஜிபி டேட்டா சேவை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் சேவை, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என வழங்கப்படுகிறது.
 
வோடபோன் ரூ.349:
இந்த திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :