10 நிமிடங்களில் 2.5 லட்சம் ரெட்மி போன் விற்பனை!!
10 நிமிடங்களில் 2.5 லட்சம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி, புதிய சாதனை படைத்துள்ளது.
சியாமி நிறுவனம் கடந்த வாரம் தனது புதிய தயாரிப்பான ’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதையடுத்து இதை நேற்று ஆன்லைனில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அதன் விலை ரூ.9,999 முதல் ஆரம்பமாகிறது.
10 நிமிடங்களில் 2,50,000 ’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போன்கள் விற்று, முந்தைய ‘ரெட்மி நோட் 3’ விற்பனை சாதனையை முறியடித்துள்ளது. ’ரெட் மி நோட் 4’ செல்போனில் பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்களை சேர்த்துள்ளது.
’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போன் Rs 9999 (2GB RAM + 32GB Flash), Rs 10,999 (3GB RAM + 32GB Flash) மற்றும் Rs 12,999 (4GB RAM + 64GB Flash) ஆகிய வகைகளில் கிடைக்கிறது.