பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன் மீது அசத்தல் ஆஃபர்: ரியல்மீ யோ டேஸ் சேல்!

Last Updated: திங்கள், 7 ஜனவரி 2019 (13:51 IST)
ரியல்மீ ஸ்மார்ட்போன் நிறுவனம் இன்று துவங்கி வரும் 9 ஆம் தேதி வரை ரியல்மீ யோ டேஸ் சேல் என்ற ஒன்றை துவங்கியுள்ளது.  இந்த விற்பனையில் ரியல்மீ பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன் மீது தள்ளுபடி வழங்கியுள்ளது. 
 
குறைந்த காலக்கட்டத்தில் பெரும் வளர்ச்சி அடைந்த ஸ்மார்ட்போன்களில் ரியல்மீயும் ஒன்று. இந்த ஸ்மார்ட்போனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது. தற்போது இதை சரியாக பயன்படுத்தியுள்ளது. 
 
ஆம், ரியல்மீ நிறுவனம் தனது பெஸ்ட் செல்லிங் ஸ்மாட்போன்கள் மீது தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த தள்ளுபடி அமேசான் மற்றும் பிளிப்கார்ட் என இரு ஆன்லைன் விற்பனை தளங்கலிலும் வழங்கப்பட்டுள்ளது. 
ரியல்மீ 2, ரியல்மீ சி1, ரியல்மீ யு1 மற்றும் ரியல்மீ 2 புரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு உள்ளது. அமேசானில் ரியல்மீ யு1 வாங்கும் போது பழைய போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.1000 ஆஃபர் பெற இயலும். 
 
பிளிப்கார்ட்டில் ரியல்மீ 2 புரோவை முன்கூட்டியே ஆர்டர் செய்தால் ரூ.1000 வரை ஆஃபர் வழங்கப்படும். 


இதில் மேலும் படிக்கவும் :