2,000, 500-க்கும் பை பை... இனி 10, 20, 50, 100 தான் கையில தங்கும்!!
ரூ.2,000 நோட்டுகளை ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையை செயல்பாட்டிற்கு எஸ்பிஐ கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என கூறப்பட்டது. இதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை என பெயரிடப்பட்டது.
இதன் பின்னர் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் மக்களின் பயன்பட்டிற்காக வெளியாகின. ஆனால், இவ்விரண்டுமே அதிக மதிப்புடைய நோட்டுகள் என்பதால் சில்லறை தட்டுப்பாடு நிலவியது. இதன் பின்னர் ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளும் வெளியானது.
இருப்பினும், அதிக மதிப்புடை நோட்டுகள் புழங்குவதால் ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுக்களை ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து நீக்குமாறு அறிவுருத்தியது. இந்நிலையில், இதனை ஏற்று தற்போது எஸ்பிஐ தனது ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ரூ.2000 நோட்டுக்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரூ.2000 நீக்கப்பட பின்னர், அடுத்து ஏடிஎம்களில் இருந்து ரூ.500 நோட்டுக்களை நீக்கும் பணிகள் நடைபெறும் எனவும் தெரிகிறது. இதன்மூலம் குறைவான மதிப்புடைய நோட்டுக்களின் புழக்கம் அதிகரிக்கும் என தெரிகிறது.