11,000 கோடி மோசடி பணப்பரிமாற்றம்: சிக்கிய பிரபல வங்கி!
நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில்தான் இந்த மோசடி நடந்துள்ளது. இந்த மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் அந்த வங்கியின் பங்குகள் சரிவடைந்துள்ளன.
சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ.280 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் ஆகியோர் மீதும் மோசடி புகார் உள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் பல வாடிக்கையாளர்களுக்கு முறைகேடான முறையில் பண பரிமாற்றம் செயயப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.