1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 5 மார்ச் 2017 (10:40 IST)

வாட் வரி அதிகரிப்பு: பெட்ரோல், டீசல் விலை உயர்வு!!

வாட் வரி அதிகரிப்பு: பெட்ரோல், டீசல் விலை உயர்வு!!
தமிழகத்தில் வாட் வரி அதிகரிப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளது. 


 
 
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78, டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.76 என நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளது. 
 
பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் மீதான வாட் வரி 21.43 சதவிதத்தில் இருந்து 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
 
இந்த வாட் வரி உயர்வால் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.74.47 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ.62.63 ஆகவும் அதிகரித்துள்ளது.