1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2017 (20:57 IST)

நிரந்தர விலை குறைப்பு: பிரபல ஸ்மார்ட்போன் அதிரடி!!

இந்தியாவில் தற்போது அதிக அளவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிரந்தர விலை குறைப்பை அறிவித்துள்ளது. 


 
 
அதாவது, ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை நிரந்தரமாக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ரெட்மி நோட் 4 விலை இந்தியாவில் ரூ.9,999 முதல் துவங்குகிறது.
 
தற்போது ரெட்மி நோட் 4 விலையில் ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுகிரது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விலை குறைப்பு மூலம் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.9,999, 4 ஜிபி ரேம் மாடல் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு பிளிப்கார்ட் மற்றும் Mi.com தளங்களில் கிடைக்கும்.