செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (12:40 IST)

விலை குறைந்தது ஒப்போ ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?

ஒப்போ நிறுவனம் தனது இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைப்பதாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
ஒப்போ நிறுவனத்தின் அறிவிப்பின் படி ஒப்போ எஃப்15 மற்றும் ஒப்போ ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களுக்கு பொருந்தும். 
 
ரூ. 3,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளதால், ஒப்போ எஃப்15 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை தற்சமயம் ரூ. 18990 முதல் துவங்குகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 21,990 ஆக இருந்தது. 
 
ஒப்போ ரெனோ 2எஃப் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 21,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.