திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 மே 2018 (15:47 IST)

லாக் இன் செய்யாமல் நேரடியாக பிரீமியம் செலுத்துவது எப்படி?

எல்ஐசி பிரீமியம் பணத்தை நேரடியாக சென்று கட்ட சிரமமாக உள்ளதா? அப்போது ஆன்லைனில் எல்ஐசி பிரீமியத்தினை செலுத்துவதற்கான சேவையை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
எல்ஐசி பிரீமியத்தினை எல்ஐசி இணையதளம் அல்லது எல்ஐசி இந்தியா செயலி மூலம் செலுத்த முடியும். எல்ஐசி பிரீமியத்தை www.licindia.in என்ற இணையத்தில் பே பிரீமியம் ஆன்லைன் என்பதை கிளிக் செய்து பணம் செலுத்தலாம்.
 
லாக் இன் செய்யாமல் பிரீமியம் செலுத்துவது..
 
எல்ஐசி இணையதளத்தில் பதிவு செய்ய விரும்பாத வாடிக்கையாளர்கள் இந்த முறையை தேர்வு செய்யலாம். இந்த முறையில் பணம் செலுத்த வழிமுறைகள் பின்வருமாறு...
 
1. பணத்தினை செலுத்த பிரீமியத்தைச் செலுத்தவும் என்பதை தேர்வு செய்யவும். 
2. இதற்கான பிராசஸ் செய்யப்பட்ட பிறகு தொடரவும் என்பதை கிளிக் செய்யவும். 
3. பின்னர் பிரீமியம் எண், பிரீமியம் செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும். இந்த 
4. கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ‘நான் ஏற்கிறேன்' என்பதை கிளிக் செய்து சப்மிட் என்பதை கிளிக் செய்யவும். 
5. அடுத்து எவ்வளவு பாலிசிகளுக்கு எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும் என்றும் வரியுடன் விவரங்கள் காண்பிக்கும்.
6. பணத்தை இணையதள வங்கி சேவை, இ-வாலெட்டுகள், கிரெட்ட் கார்டுகள், டெபிட் கார்டுகள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு, ஸ்டாண்டர் சார்டெட் வங்கி யூபிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி யூபிஐ வழியாக செலுத்தலாம்.